வரவேற்போம் புத்தாண்டை

வரவேற்போம் புத்தாண்டை...
=========================

ஆண்டே வா! புத்தாண்டே வா!
வரவேற்றே சூட்டு மாலைகளை
வாண்டே வா! கற்கண்டே வா!
வாசலில் கொளுத்து பட்டாசுகளை

புத்தம் புது மலராய் புத்தாண்டு!
இனிமைகள் கொடுக்க வருகிறது!
துன்பத்தின் சதவீதம் குறைவு எனில்
இன்பமாய் ஆடுவோம் வாருங்களே!

பசித்தே உணவு கேட்டு வருவோருக்கு
பசிப்பிணி போக்க உண‌விடுவோம்!
நலிந்தே வாடும் எளிய மனிதருக்கு
நானுண்டு என்றே உதவிடுவோம்!

ஊருக்காய் உழைப்பேன் என்று சொல்லி
பேருக்காய் உழைப்போரைத் தவிர்ப்போம்!
காருக்குள் ஒளிந்திருக்கும் மழைத்துளி போல்
நெஞ்சமுள்ள அன்பையள்ளி அளிப்போம்!

பசுமை காப்போம்! அநீதி வெறுப்போம்!
இனிமை உள்ள மனிதர்களே!
நண்பர்களை வாழும் காலம் மதிப்போமென‌
சபதமெடுத்து புத்தாண்டை கொண்டாடுவோம்

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (1-Jan-24, 9:14 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 68

மேலே