முதுமொழிக் காஞ்சி 99

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஏமம் வேண்டுவோன் முறைசெய றண்டான். 9

- தண்டாப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், குடிகளைப் பாதுகாத்தலை விரும்பிய அரசன் நீதிமுறைமைப்படி அரசுசெய்தல் தவிரான்!

பொழிப்புரை: குடிகளைக் காக்க விரும்பிய அரசன் முறைமைப்படி நடத்த லொழியான்.

குடிகளை ரக்ஷிக்க விரும்பிய அரசன்நீதிமுறை தவறாமல் நடப்பான்.

'ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்(து) யார்மாட்டும்,
தேர்ந்துசெய் வஃதே முறை' 541 செங்கோன்மை (திருக்குறள்) என்பதனால் முறையின் இலக்கணம் விளங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jan-24, 12:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

மேலே