முகில் இதழகல் பாக்கள்

****************************
நீலத்தைத் தாண்டி நிறைந்தழகாய் நிற்கின்ற
சீலத்தா காயச் சிகை
*
அந்தரத்தி லாடி யசைகின்ற தத்தையென
நர்த்தனித்த நங்கை நடை
*
நட்சத் திரநகரில் நங்கைநிலா நீராட
நட்டநிசி தந்த நதி
*
நல்ல நகையணியாய் நற்றாரகைத் நாடியே
அல்லி லலைகின்ற ஆள்
*
கஞ்சாக் கடத்திடக் காற்றா யலைகிற
அஞ்சாக் கசடர்க்கை ஆள்
*
இல்லிலா ஏழை இடராலே ஏங்கியழக்
தாங்கிதே கண்ணீரைத் தான்
*
காற்றி லலைகின்றக் காலில்லாச் சிங்கங்கள்
சீற்றிச் சிதறிடச் சீர்
*
நீண்ட நெடுங்காட்டில் நீரைத் தெளித்திட
ஆண்டாரே கட்டா அணை.
*
ஆகாயச் சந்திரனின் அன்றாடத் தாகத்தில்
நாகாயா தாக்க நதி
*
சிகரங் களில்தங்கி சிற்றாற்றின் காலை
நகர்த்திய நீரின் நகை
*
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Feb-24, 2:06 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 133

மேலே