மணலில் வட்ட வட்டக் கோலம்
இளவேனிர்க் காலம் எங்கும்
பூத்துக் குலுங்கும் மாவும் வேம்பும்
இளம்பெண்களின் உள்ளத்தில் -மணவேட்கை
கற்பனையில் , கனவில் மணக்கோலம்
அதோ போகிறார்கள் அவர்கள்
தோழிகள் சூழ்ந்த குழாமாய்...
அவர்கள் போவதெங்கே ?
அவர்கள் கிராமத்திலிருந்து சில நிமிட
நடப்பில் அடைந்திடும் ஆற்று மணல் மேடு..
அங்கு இவர்களுக்கு என்ன வேலை ?
வாருங்கள் போய் ப்பார்ப்போம் ..
அதோ பார்....அங்கு ஓர் இளவஞ்சி
அவள் கண்களை தோழியர் கைக்குட்டையால்
இருக்க மூட ......அவள் மணலில் ஏதோ
ஒரு கோலம் போட முனைகிறாள்...
என்னதான் அது என்று அருகே சென்று கேட்க
புரிந்தது...அந்த சாதனையின் முயற்சி,,!!!!
ஆம்,,,,,,அவள் தன கை விரலால் ஒரு
முழுவட்டம் ...கோலமாய்த் தீட்டவேண்டுமாம்
பிசகெதும் இல்லாது...
அப்படி வரைந்து விட்டால்......
இந்த இளவேனிர்க் காலம் முடியு முன்பே
அவள் கனவில் கண்ட அல்லது மனதில் வரித்த
மணாளனை அவள்கணவனாய் அடைவாளாம்
இது காலம் தொட்டு அவ்வூரில் இளவேனிற்காலத்தில்
நடந்திடும் ஓர் கோலாகலமான விழா...
அக்கால இந்திரா விழாப்போல் ....
இது அத்தனையும் ஒருவர் சொல்லக் கேட்ட உண்மை சம்பவம் !!