கடைசி முத்தம்

தாய் வயிறு கிழித்து
தலை முழுதும் இழுத்து
கையிலேந்தும் கணம் எனக்கு
தாய் கொடுத்த முத்தம் - அது
முத்தான முதல் முத்தம்

வழியில் என்னை மறித்து
வாரி கட்டி அணைத்து
உற்றாரும் உறவினரும்
கொஞ்சி கொடுத்த முத்தம் - அது
இரண்டாவது முத்தம்

பள்ளி வயது முடிந்து
பருவ வயது தொடங்கி
யாருமற்ற இடமாயின்
அவள் கொடுத்த முத்தம் - அது
பருவ கால முத்தம்

திருமணமோ முடிந்து
திங்கள் முகம் நடந்து
மணமகளாய் முதலிரவில்
மனைவி கொடுத்த முத்தம் - அது
மகிழ்ச்சி காண முத்தம்

ஆண்டவனே எழுந்து
அவன் வடிவில் நுழைந்து
ஆடி பாடி கட்டியணைத்து
அவன் கொடுத்த முத்தம் - அது
அன்பு மகன் முத்தம்

இளமையெல்லாம் முடிந்து
முதுமை வாழ்வில் தொடங்கி
கதை சொல்லும் வேளையிலே
கன்னத்தில் ஓர் முத்தம் - அது
பெயரன் பெயர்த்தி முத்தம்

ஆகாயம் அழைக்க
அவன் வரும் அந்நேரம்
கூட்டை உயிர் பிரிய- மீண்டும்
மனைவியவள் கொடுத்த முத்தம்- அது கடைசிக்கான முத்தம்

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (11-Feb-24, 7:13 am)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : kadasi mutham
பார்வை : 228

மேலே