அமைவதுமுண்டு

உலகத்தில் பயங்கரமான ஆயுதம் எது?
பலர் வாழ்வை நாசமாக்கும் நாக்குதான் அது.
அதனால்தான் யாகாவாராயினும் நாகாக்க என்ற
அய்யன் வள்ளுவனின் வாக்கை இன்றும்
நினைத்து பார்த்து வாழ்ந்திடு - தம்பி
முப்பத்திரண்டு கல்லடுக்கு குகைச் சிறைக்குள்
இருக்கும் மிருதுவான இந்த நாக்குதான்
பாசத்தை காட்டும்போது அன்பையும் அக்கறையும்
காதலை சொல்லும்போது காதில் கிசுகிசுப்பாய்
கண்டிக்கும்போது கனலாய் அதே நாக்கு
கூர்வாளாய் கொத்தி குதறி வாழ்வை
சின்னாபின்னமாக்கிடும் கொடும் ஆயுதமாய்
மாறிப் போகும் தன்மையது உண்மையிது
புரிந்து கொண்டு நாகாக்க .
அடக்கத்தில் சிறந்தது நாவடக்கம். அவ்வடக்கம்
பல சமயம் தவறுக்குத் தண்டனையாய் அமைவதுமுண்டு.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (21-Feb-24, 6:40 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 147

மேலே