கானல் நீர்
கண்முன்னே
நீ...... கானல்
நீராய்
கனவுகள்
நீள்கிறது......!!
காலங்கள்
நீண்டது
கோலங்கள்
மாறியது.......ஏனோ
என்
நினைவுகளை
எவனோ
களவாடி
போனது மட்டும்
உனக்கு
மட்டுமே
புரியும்......!!
விரிந்த
உலகத்தில்
புரிந்த
உள்ளத்தில்
ஒரு
புள்ளியாய் ஏனும்
என்
நினைவு
உன்
நெஞ்சில்
இல்லையென்று
எங்கேயும்
சத்தியம்
செய்திட
முடியாது.......!!
எந்நாளும்
என்னாலும்......!!!!