நல்ல மேய்ப்பள்
நல்ல மேய்ப்பள்
மெய்வருந்த
மேய்ப்பவள்
ஊழ்வினைப்பற்றி
அறியாள்.
நடப்பனவற்றின்
பசியறிந்து
புல்லூட்டி
மகிழ்வாள்.
பள்ளிப்பக்கம்
போகாதவளுக்கு
புல்லினத்தின்
மொழியும்
தெரியும்...
நச்சு
ஊர்வனவற்றிலிருந்து
காக்கவும்
தெரியும்.
நாடோடி என
உலகம்
விளித்து
விரட்டினாலும்
தோளோடு
தோழனையும்
தோழியையும்
அணைத்து மகிழும்
இவளுமொரு
நல்ல
மேய்ப்பளே.
- எழில்

