துளிகள் 4
உன்னை நினைவுகூறுகிறேன். 
ஜென்மங்களுக்கப்புறம் 
பறித்தெறிய மனமில்லாத
ஒரு ஷெண்பகம் பூத்த வாசனை ம் .  
மனதில் கொண்டுநடந்த 
மயில்பீலித் துண்டு 
விழுந்துவிட்டதாய்  
நினைத்துக்கொள்கிறேன்.
உன்னிடம் 
என்றோ அதை 
ஒப்படைத்ததை மறந்து. 
பைராகி

