ஆசிரியர் வழிக் கல்வி

ஆசிரியர் வழிக் கல்வி
🍡🍡🍡🍡🍡🍡🍡🍡🍡

கரும்பலகைப் படிப்பு
கரும்பாக இனித்திட/
அரும்பும் மழலையும்
அழகாகக் கற்றிடுமே/

பள்ளியும் திறந்திட
பாலர் கூட்டம்/
துள்ளியே செல்வர்
துடிப்புடன் கற்றிடவே/

அன்பால் ஆசிரியர்
அறந்தனை ஊட்டிடவே/
பின்பற்றி நடந்திடப்
பின்னார் நலமே/

ஏட்டுக் கல்வி
ஏணியாகும் வாழ்வுக்கு/
பட்டம் பெற்றிட
பார்யெங்கும் புகழே/

கணினிக் காலம்
கனிந்த போதிலும்/
அணிவகுக்கும் சீருடையில்
அரசுப்பள்ளி மின்னுதே/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (30-Mar-24, 9:01 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 338

மேலே