எரிமலையாக எழு பெண்ணே
எரிமலையாக எழு பெண்ணே
++++++++++++++++++++++++++
நெற்கதிராகத் தலை குணிந்நு
நடந்தது போதும் பெண்ணே
தலைநிமிர்ந்து நடை போடு
தாழ்வுக்கு தடை போடு
உயர்வுக்கு வழி தேடு
இகழ்ச்சியின்றி புகழ் தேடு
வண்டாக சுற்றும் ஆடவரில்
வஞ்சகரைக் கண்டால் பெண்ணே
எரிமலையாகக் கொதித்து தெழுந்து
எரித்து நீயம் புனிதவதியாகிவிடு
பெண்ணே உனக்கு நிகரில்லை
பெண்மையின்றி உலகில் உயிர்களில்லை
அனைத்து துறையிலும் கால்பதித்து
ஆணுக்கு இணையாக சமமாக்கு
நிலவாக நீயும் இரவில்
உலா வந்து இருளகளற்றி
காந்தியின் கனவை நினைவாக்கு...
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்