வஞ்சனை உள்ளத்தை அறியவேண்டும்
வஞ்சனை உள்ளத்தை அறியவேண்டும்
அன்புள்ளவன் போல உடன் இருந்து உறவு காட்டி
ஆசையுடன் நம்மை கட்டி அணைத்து ஒட்டி உறவாடி
இன்முகம் கொண்டு இனிமையாக பேசி கை பிடித்து
ஈன்றபொழுது இருந்த உள்ளமோ என நம்ப வைத்து
உள்ளத்தில் உள்ள பொருமலை மறைக்க சிரிக்கும்
ஊழ்வினைபோல் நம்மை பின்னிருந்து தாக்கும்
எல்லோரும் உறவு போல் இனிமையாக நடித்து
ஏமாற்றிடும் வஞ்சகம் நிறைந்த மனித இனம் இதை
ஒன்றும் முடியாமல் வேதனையோடு ஏற்கும் மானிடர்கள்
ஓசையின்றி உள்மனதில் அவர் நிறம் அறிந்து விலக
வஞ்சனை கொண்ட நெஞ்சத்தை உடன் அறிந்து கொள்ள
வழி அருள்வாய் என லோகநாயகனை வேண்டி வணங்குவோம்.
வஞ்சனையுள்ள நெஞ்சத்தை உடனறிய
ஏற்றம் கண்டு பொருமும் உள்ளத்தை கண்டறிய
இன்முகம் முன் காட்டி பின்னால் இகழும் மனிதரை
அவர் எனக்கு இனி உறவில்லை என வெட்டி எறிய
எந்நாளும் இன்பம் வரும் என அறிந்தேனே
வேதனைகளைக் கண்டு மகிழும் மனமும்
வெற்றியை கண்டு வேகும் உள்ளமும்
மற்றவர் வாழ்வை எள்ளி நகையாடும் குணமும்
மாயையில் மயங்கி மற்றவரை பழிக்கும் எண்ணமும்
உடையவர் உறவாகிலும் அழிவை விதைப்பவரே
அத்தகையோரை கண்டு கொண்டால் என்றும் நன்மையே

