நன்மதி வெண்பா - நூல் - பாடல் 33
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
கொள்ளேல் கொடியோர்தங் கூட்டுறவு கொண்டபுகழ்
தள்ளேல் கடனளித்துச் சஞ்சலத்துக்(கு) - உள்ளாகேல்
என்புருக்கு மென்குதலை யேந்திழையார் நன்மதியே
அன்புளரென் றுன்னேல் அகத்து! 33

