வாழ்க்கை சுமை

வறுமையில் கல்வியிழந்து
பெருஞ்சுமையாய் வாழ்கை சுமந்து
காலபெருவெள்ளத்தில்
மூச்சிரைக்ககூட திறனில்லாமல்
அலைமோத...
விஞ்ஞான அடைமழையில்
ஓர் சின்ன துடுப்புமில்லா
ஓட்டை படகாகி போனேனே
வாழ்வை புரியா பிணமாய் ஆனேனே..
புலமை வாய்ந்தவனும் பழமையாகுறானே
அதற்கு பழக்கபட்டும் போறானே
இழுக்குமில்லா ஓர் வழுக்குமில்லா
வாழ்வு எங்கே புலபடட்டும் இங்கே..