சிலேடை-பகடி

சிலேடை-பகடி

ஒரு சொல் அல்லது தொடர் சொல் பல பொருள்படும்படி அமைவது சிலேடை.
மொழிக்கு உரிய அணிகளில் இதுவும் ஒன்று
செய்யுள்களிலும், உரை நடைகளிலும், மேடை பேச்சுக்களிலும் “சிலேடைகள்’
பயன்படுத்தப்படுகின்றன.
அறிஞர்கள் பலர் சர்வசாதரணமாக தங்களுடைய பேச்சுக்களில் சிலேடையாக பேசுவதில் வல்லவர்கள்.
இதன் இலக்கணம்
ஒருவகை சொற்றொடர் பலபொருள் பெற்றி
தெரிதர வருவது சிலேடையாகும்
பகடி: பரிகாசம் (joke, witty, repartee,mockery, ridicule, parody)
ஒருவருக்கொருவர் தங்களுக்குள் பரிகாசமாய உரையடிக்கொள்வதுண்டு
இதனை ஒத்த சொற்களாக சொல்வது
எகத்தாளம், நையாண்டி, எக்காளம்,கிண்டல், கேலி நக்கல், பரிகாசம்,பரியாசம்
நம் பக்கத்தில் “நையாண்டி மேளம்” என்றொரு இசை உண்டு.
பரிகாசம் என்பது பரிவை மேற்கொண்டாலும் காய்தலுடன் எதிராளியுடன் பேசுவது.
பகடி நையாண்டி அல்லது முரண்பாடான சாயல் மூலம் அதன் விசயத்தை பின்பற்றவும், கருத்து தெரிவிக்கவும், அல்லது கேலி செய்யவும் புனையப்பட்ட ஆக்கபூர்வமான செயலாகும்.
“ஓரு நகரம் உருவாவதற்கு முதல் தகுதி “பசி”
நாகரிகத்தின் வளர்ச்சியும் பிச்சைக்காரர்களின் புகலிடமாகவும் நகரம் வளர்ச்சி அடையும் போது முதலில் தெரிவது “பசி”
நாளொன்றுக்கு அதிக நேரம் வாசிப்பவனை “புத்தகப்புழு” என பகடி செய்கிறோம்
“ஆட்டுகுட்டியின் பாடல்” கசாப்பு கடைக்காரனோடு முடிந்து விடும்
“வெளிக்கு” போவதென்றாலும் அவர்கள் இருவரும் ஒன்றாய் போனால்தான் சரியாக வரும்- இது ஒரு பகடி
ஒரு சொல் இருபொருள் பட வருவது சிலேடை
காளமேகப்புலவரின் சிலேடை பாடல் ஒன்று:
“ஆடிக்குடத்தைடையும், ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகம் காட்டும்-ஓடி மண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற் பிண்ணாகு முண்டாம்
உற்றிடும் பாம்பெள்ளனவே ஓது
பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடை அமைத்து பாடும் பாடல் இது
பாம்பு படமெடுத்து ஆடிய பின்னர் பாம்பாட்டியின் குடத்துக்குள் அடைந்து கொள்ளும்.படம் எடுத்து ஆடும்போது உஸ் உஸ் என இரையும்.பாம்பாட்டி குடத்தை திறந்தால் பாம்பு முகம் காட்டும். ஓடிப்போய் மண்டை ஓட்டில் சுருண்டு கொள்ளும், பரபரவென ஓசை எழுப்பும், இரட்டை நாக்கை கொண்டிருக்கும்.
அது போல எள்ளும் செக்கில் ஆட்டிய பின்னர் எண்ணெய் குடத்தில் ஊற்றப்படும். மூடியை திறந்து பார்த்தால் நம் முகம் தெரியும். எடுத்து தலையில் ஊற்றி தேய்த்தால், மண்டையில் பரபரவென ஊறும். எள்ளெய் ஆட்டிய பின் பிண்ணாக்கும் கிடைக்கும்.
பழத்தையும்,பாம்பையும் குறித்த சிலேடை பாடல்
நஞ்சிருக்கும், தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது-விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்
பாம்பிடம் நஞ்சிருக்கும், தோலை உரிக்கும், சிவனின் தலை மேல் இருக்கும், சினத்தால் அதன் பல் பட்டால் உயிர் மீளாது
வாழைப்பழம் நைந்து போயிருக்கும், அதன் மேல்தோல் உரிக்கப்படும், சிவனுக்கு படைக்கும் படைப்புக்களில் முதலாய் இருக்கும்,கொடிய பசியோடு இருப்பவர் ஒருவரின் பல்லில் பட்டால் மீண்டு வராது.
பாம்பும்-எலுமிச்சம்பழமும்
அரியுண்ணும் உப்பு மேலாடும்-எரிகுணமாம்
தம்பொழியுஞ் சோலைத் திருமலைரா யன்பரம்பரையில்
பாம்புக்கு பெரிய அளவில் நஞ்சு இருக்கும், சிவனின் முடிமேல் இருக்கும், அரி (காற்று) உண்ணும், அதனால் அதன் தலை விரியும் படம் எடுத்து ஆடும், எரிச்சல் கொண்டதால் சினம் கொள்ளும்
எலுமிச்சம்பழம் பெரியவர்களிடம் மரியாதை நிமித்தமாய் சேரும், தலை பித்தம் கொண்டால் தேய்க்கப்படும், அரிவாள்மனையில் ஊறுகாய்க்காக அரியப்படும், உப்பிட்டு ஊற வைக்கப்படும். அதன் ஊறல், உப்பு கண்ணில் பட்டால் எரிச்சல் உண்டாகும்.
சிலேடை பேச்சில் வல்லவர்கள்
உ.வே.சாமிநாதய்யரின் சீடர் கி.வா.ஜ இத்தகைய பேச்சில் வல்லவர்.
கிருபானந்த வாரியார்- “அந்த காலத்தில் பழங்கள் நிறைய சாப்பிடுவார்கள், இன்று “பழங் கள்” அதிகமாக சாப்பிடுகிறார்கள்.
இசை விமர்சகர் சுப்புடு அன்று கச்சேரியில் அவர் காதிலும் ‘கம்மல்’ அவர் சாரீரத்திலும் ‘கம்மல்’
கி.ஆ.பெ.விசுவநாதன்: “இவர் பல்துறை வித்தகர் என்று ஒருவரை அறிமுகப்படுத்தினார், ஆனால் அவரிடம் அந்தளவு விசயம் வெளிப்படவில்லை, இவரோ அமைதியாக அவர் அவர் “பல் துறை” வித்தகர் என்றேன், என்றார்.
“பாரதி சின்னப்பயல்” கடைசி அடி வரும்படி பாட சொன்னார் காந்திமதி நாதன் பாரதியிடம்.
காரதுபோல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்
பார் அதி சின்னப் பயல்
பாரதி என்பதனை பார் அதி என்று பாடி முடித்து கொடுத்தார் பாரதி.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (23-Apr-24, 12:40 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 43

மேலே