தூக்கம் தொலைத்த கண்கள் பூத்த உன் கணவன் எழுதிய சில வரிகள்

தூக்கம் தொலைத்த
கண்கள் பூத்த
உன் கணவன் எழுதிய சில வரிகள்

நீ சென்ற இரண்டு இரவுகள்
பகலாய் மாறி போகிறதே
தூக்கம் என்ற உன்னை எடுத்துக் கொண்டு சென்றாயே!
ஓடிக்கொண்டே இருக்கிறது தலைக்குள்.

இருக்கும் போதும் எனக்கு தலை வலி.
இரண்டு நாள் தூங்காமலும் தலைவலி.

இருந்து தரும் வலியை விட
நீ அருகில் இல்லாத போது வரும் வலி கொடியது.
அறிந்து கொள்வாய் என் நிலையை

புரிதலைக் கொண்டு புதியதலாய் மாறிடு

தூக்கம் தொலைந்து கண்கள் இமைகள் மூடாமல் தவிக்கிறது

நாள் இன்று என்னால் அறிய முடியவில்லை

என்னை அறிந்தால் கூறிவிடு

வந்த கூடி விடு

நீ பேசுகின்ற வார்த்தைகள் சரியல்ல
அன்று

இன்று நான் பேசும் வார்த்தைகள் சரி
என்று
நீ வந்து விடு

கோபங்களை கொள்ளாதே உன் கோபங்களை கொள்ளாதே


உயிரைக் கொல்லாதே என் உலகையும் கொள்ளாதே


இரவு முழுவதும்.😃
இதுவும், இரவா என்று என நினைக்க வைத்து விட்டாய்


உறவுகளுடன் வாழ்வதே😃 உறவு


என் உறவே என்னுடன் வந்து விடு


பாடல்கள் ஏது ஆசையாக உள்ளது


என் குரல் எங்கே சென்றதோ அதனால் பாட முடியாமல் தவிக்கிறது



புரிதலைக் கொண்டு புரிதலாய் வந்துவிடு

மாமன்னனின் மனதை வென்றவள் நீயே

தனி மரமாய் ஆலமரமாய்
எந்த மரமாய்
உந்தன் மரமாய்
காய் போல் காய்ந்திட
பழம் போல் பலத்திட

நீ என்னுடன் உலா செல்ல.
வா வெண்ணிலா.
நான் உன்னில்லா.

மழை பெய்யும் முன் வரும் வானவிலா

அறிவில்லா அறிவுள்ள
அறிந்து தெரிந்து புரிந்து புரிந்து கொண்டேன்
மாமண்டையில் ஏற்றி விடு உன்னறிவை குறைந்தும் தந்துவிடு
சொல்ல ஏராளம் இருக்கு

சில நொடிகளில் நீ போடுகிறாய் தவறான கணக்கு


உன் முன் கோபத்தால்



உன் கோபத்தால் என் ஊரை வாங்கி விடாதே.


என் உயிர் இருந்தாலும் உனக்கு பயனில்லை

என் உயிர் பிரிந்தாலும் உனக்கு பயமில்லை ( அன்பு))


போன பிறகு
தேவையில்லைடி புலம்பல்
என்னை புதைப்பதால் உனக்கும் கிடைக்காது சாம்பல்
முல்லை போல் தைத்து கொண்டே
இருக்கிறாய் மனதினில்
நவீன காலத்தில்
மோட்டார் தையல் மிஷினை போல் தைத்து கொண்டிருக்கிறாய்
அதிவேகமாய்

சிறு சிறு துணைகளால்
ரணகளம் ஆகுதே
ரத்தக்காலமாய் மாறிக் கொண்டிருக்கிறது

மனதிற்குள்.


மூச்சு மூச்சு முட்டி கொண்ட நாட்களை மறந்தாயோ

புத்தகங்கள் போல் ஒட்டிக்கொண்ட பக்கங்களை மறந்தாயோ

நூலகத்திற்கு உள்ளே நூல்களைப் படைத்தோமே

நூலால் படைத்த ஆடைகளை கலைத்தோமே

உன் சொல் என் சொல்
என் உயிர் சொல்

முழு தேய்பிறையில் சென்றவளே
வளர்பிறையும் தொடங்கியும் வராமலே இருப்பவளே

காற்று ( உந்தன் நினைவுகள் )
மட்டும் இல்லை என்றால்
நீ காண முடியாது இந்த உன் இந்த உறவை

என் உணவே நீயடி
திருநாள் இல்லாமல் போனதடி

இல்லாடி தில்லாடி கொண்டாடி
நீ வருவாய் எப்போ டி


உன் தொல்லைகளே எனக்கு ஆனந்தமாய் உள்ளதடி

உன் தொல்லைகளை என் எதிரே செய்வாய் என் உடனே செய்வாய் ஆனந்தமா ஏற்றுக் கொள்கிறேன்
செல்ல சண்டைகளை

சென்று சென்று விடுவாய்
மாதம் பலமுறை

நமக்கென்று இந்த அறை ( வீடு) எதற்கு

உலா போகும் நேரம் நட்சத்திரங்களும் ஜோடி போற்று சுற்றும்

நீயும் நானும் நிலவைப் போல காத்திருப்பதேனோ

என் பூங்காற்றே
என் பூங்காற்றே

என் உயிர் வாசம் தந்த பூங்காற்றே

பூத்துக் குலுங்கும் மலரே
அரை குடம் போல தழும்புவது ஏனோ
ஏனோ

எல்லையில்லா வானை போல

அன்பு செய்வோம் நாம் இருவரும்

நீயும் நானும் சேர்ந்த தான்
பல உலகங்களை படைத்திடுவோம்
ஓரிரை துணையோடு


அவன் அருள் உள்ள பொழுது
என்னை வெல்ல முடியுமோ இப்பொழுது



ஒன்றே முடிவல்ல
உலகத்தை படித்திட
புத்தகம் போல் இணைந்திருப்போம் நூலகத்தில்

வாசகன் படிக்கும் நேரத்தில் மட்டும் பிரிந்து இருப்போம் சில நொடிகள்


விண் கல்லை போல விண்ணி கிழித்து மண்ணைத் துளைத்து
என் நெஞ்சம் என்ற பூ பூத்திருக்குள்

தீ மூடியவளே

முடியாமல் தவிக்கிறேன்
பொங்கி வலியும் நீரூற்றை போல அல்லாமல் எரி குழம்பு போல் ஊட்டுதே ஊற்றுதே ஊட்டுவது


தாங்குமோ என் தேகம்
அதனால் பல சோகம்
காக்க வைக்காத இந்த காகம்
எப்போ அடங்குமோ இந்த தாகம்
என்னையும் டிஆர் (TR) ஐ போல எழுத வைத்தவளே

இல்லன்னா தூக்கம் மறந்து

உங்க நினைத்தும் தூக்கம் வராமல் தவித்து

கண்கள் விழித்து விழித்து
மல்லி பூ பூத்தது போல் கண்கள் பூத்து
செய்ய வேண்டும் ஒரு மாலை
என் கண்களை வைத்து

கண்ணால் செய்த மாலையை அணிய ஆசைப்படுகிறாயோ


அதனால் என் தூக்கத்தை கலைக்கிறாயோ

தோட்டத்தில் பூக்காத பூக்களை
பூ மார்க்கெட்டில் கிடைக்காத பூக்களாய்

நீ விரும்பி விட்டாய்
என்றால்

விழித்திருப்பேன் என் கண்கள் பூத்துக் கொண்டிருக்கும் வரை

உன் தலையில் அமரும் காலம் வரும் வரை கண் மலராய்


மு. கா. ஷாபி அக்தர்
பூவை

எழுதியவர் : மு. கா. ஷாபி அக்தர் (21-Apr-24, 9:46 am)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
பார்வை : 112

மேலே