உடன்பிறப்பே என் உடன்பிறப்பே
உடன் இல்லாத பொழுது ஒரு வெற்றிடம்
அவன் வெற்றி காணவே!
இப்பொழுது நாடு விட்டு நாடு
இங்கு இருக்கும்போது மாடு உடன் மாடு
உன் கண்ணில் தெரிகிறது உன் குழந்தைகள் பிரியும் நேரம்
உன் சோகம் உன்னை ஆட்டியது
மாறிடும் இந்த நிலைமை
நீ மாறிடும் பொழுது
நாடு கடந்து சென்றாலும்
உன் மனதில் இருக்கும் பல நிலையை கடந்து வந்த பிறகு தான் சாத்தியமாகும்
இப்போது கற்றுக் கொண்டிருக்கிற வாழ்க்கையில் பாடங்களை
கற்று கொடுத்து இருக்கும் சில நிமிடங்கள் தனிமையில் உள்ள பொழுது
தனிமையின் வலி கொடியது
பிள்ளைக்காக தனிமையில் இருக்கும் பொழுது அது வழியது
உனக்கென வழிகள் பிறக்கும்
சில குணங்களை மாற்றிக் கொண்டால் சில பண்புகளை மாற்றிக் கொண்டால்
பிள்ளைகளை எண்ணி
நீயும் பிள்ளையும் மனதை போல் மாறிவிடு.
பழையதை அனைத்தும் விட்டுவிடு
நீ விமானத்தில் பயணிக்கவா சென்றாய் -
இல்லை
அந்த நாட்டின் அழகை ரசிக்க வாய் சென்றாய் - இல்லை
தானாக முன்வந்து
சென்றாய் அயல்நாடு
பிள்ளைகள் எதிர்காலம்
உன் இந்த காலத்தால் தான் முடிவு செய்யப்படுகிறது
எடுத்த முடிவில் இந்த முடிவும் சரி என்று நான் கூறுவேன்
அந்த நொடியில் வென்றாய் என் மனதை
என் சகோ என் சகோ
தொலைதூரம் சென்றாலும்
துளையில்லா என் மனதிலும் தொலைத்திருக்கும் உன் நினைவுகள்
மீண்டும் சில செயல்களை செய்கிறாயோ
விட்டுவிடு பிள்ளைகள் எதிர்காலம் உன் கையில்
நீயும் வாழ்
உன் குடும்பமும் வாழ
இந்த காலம் நீ வாழ்கிறாய் என்று புரிந்து கொள்
உன் அறிவை வளர்த்துக் கொள்
உன் பதவிகளை மாற்றிக் கொள்
வருமானங்கள் எப்பொழுது வந்துவிடும்
சில மன நிம்மதியை தந்து விடாது
அறிவழும் கடலை பருகிக் கொள்
அடுப்பங்கரையில்
சேர்த்து உன் மனதில் உள்ள சில கரைகளையும்
அகற்றி விடு,
நீ அடுப்பு பத்த வைக்கும் பொழுது வருகின்ற ஒளியை போல நீயும் பிரகாசம் கொடு
ஏதோ மனதில் தோன்றிய வார்த்தைகளை
உனக்கு எழுதி அனுப்புகிறேன்
புரிந்து கொள்வாய் என்ற எண்ணத்தில்
நம்மை காப்பாற்றிக் கொள்ள எவரும் கிடையாது
தன்னைத் தவிர
இந்த உலகில் யாரை நம்பி விடாதே
என்னையும் சேர்த்து தான் கூறுகிறேன்
சுயநலமான இந்த உலகிலே
சுயநலம் கலந்த பொது நலமுடன் வாழ வேண்டும்
பொதுநலத்துடன் வாழ்ந்தால்
என் நிலைமை தான் உனக்கு வந்து விடும்
பருகிய அறிவு கடலை
பகுத்தறிவுடன்
செயலில் கொண்டு வா.....
இது சில வரிகள் மட்டும் தற்போது,,,,,,,
மு. கா. ஷாபி அக்தர்