எங்கள் ஊர் தெரு விளக்குகள்

எங்கள் ஊர் தெரு விளக்குகள்

வானம் இன்னும்
இருள் சூழவில்லை
தெரு விளக்குகளுக்கு
ஏனோ அவசரம்
வீதியெங்கும்
கண் விரித்து
வெளிச்சமிட்டு
கொண்டிருக்கிறது

வானம் இருள்
விலகி சூரியனும்
எட்டி வந்து
விட்டான்
வீதியெங்கும்
கண்ணை விரித்த
விளக்குகள்
இன்னும் கண்ணை
மூடி உறங்க
மறுக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (5-Sep-24, 2:12 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 41

புதிய படைப்புகள்

மேலே