ஆசிரியர் தினக் கவிதை

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

*ஆசிரியர் தினக் கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️


மொட்டுக்களை மட்டுமல்ல
முட்களையும்
மலர்களாக
மலர வைக்கும் செடிகள்....

இளமை வயலை
கல்வி ஏரால் உழுது
அக்கறை நீர் பாய்த்து
கட்டுப்பாடு வேலிப்போட்டு
ஒழுக்க உரமிட்டு
அறியாமைக்களை எடுத்து
அறிவு பயிர் வளர்க்கும்
விவசாயிகள்......

விழிகளுக்குள்
விளக்கேற்றி வைக்கும்
திருக்கரங்கள்......

அந்தச் சிப்பிக்குள்
அடைபடுங்கள்
நீங்கள் முத்தாகுவீர்கள்....

இரும்பாக இருக்கும்
மாணக்கர்களை
ஆயுதங்களாக
வடிவமைப்பவர்கள்.....

இவர்கள்
கையில் இருப்பது
தடி அல்ல உளி....

இவர்கள் எழுதுவது
வெறும் எழுத்துக்கள் மட்டுமல்ல மாணவர்களின்
தலையெழுத்து......

தாய்க்கும்
ஆசிரியர்களுக்கும்
பெரிய வித்தியாசம் இல்லை...
தாய்
கருவறையில் சுமந்தால்
இவர்கள்
மனவறையில் சுமக்கிறார்கள்.......

இவர்களின்
இதழ்களில் இருந்து வருவது
மொழி அல்ல
அது ஒரு சொர்க்கத்தின் வழி.....

இவர்களின் முன்னால்
குனிந்து நில்லுங்கள்
நாளை
நீங்கள் நிமிர்ந்து நிற்பீர்கள்.....

கோபுரங்கள்
இல்லாத ஆலயங்கள் தான்
கல்வி நிலையங்கள்....
அபிஷேகம்
ஆராதனை
இல்லாத தெய்வங்கள் தான்
ஆசிரியர்கள்...

கல்லைக் கொடுத்தாலும்
சிலையாக....
காகிதத்தை கொடுத்தாலும்
பட்டமாக....
சொற்களை கொடுத்தாலும்
கவிதையாக....
வண்ணங்களை கொடுத்தாலும்
ஓவியங்களாக
மண்ணைக் கொடுத்தாலும்
மாளிகையாக
மாற்றும் கலைஞர்கள்.....

மாணவர்கள் மனதில்
கனவுகளை விதைக்க
ஓராயிரம் பேர் இருக்கலாம்..
ஆனால்
அந்த கனவுகளை
நினைவாக்க
இவர்கள் மட்டும் தான்
இருக்கிறார்கள்......!!!.



*கவிதை ரசிகன்*

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

எழுதியவர் : கவிதை ரசிகன் (5-Sep-24, 8:37 pm)
பார்வை : 18

மேலே