காதல் என்பது எதுவரை

முகம்காணா வகையினிலே
முகநூலில் காதல் கொண்டு

முரண்பட்டு பின்னாளிலே
முறிக்கின்றது ஏராளம் உண்டு

நகமோடு சதையாக
நான்கைந்து மாதங்கள்

அகம்கசந்து அலைமோதும்
அவர்வாழ்வின் நாட்டங்கள்

மெய்தழுவி ஒருசிலநாள்
மெய்யாக இருந்து

மைவிழியாள் மைவிழியின்
மைகரைந்து போக

கைகழுவி வேறொன்றின்
கரங்கள் பற்றிக்கொள்ள

மரணம்வரை செல்லுமென
மனதுவைத்தக் காதல்

மண்ணோடு மண்ணாக
மரணித்து மாண்டுவிட

காதலெது வரையென்று
காதலர்க்கேக் தெரியும்

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (10-Sep-24, 7:59 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 101

மேலே