ஒரு காவியம் படைக்கப் படுகிறது

ஒரு காவியம்
படைக்கப் படுகிறது......!
10 / 09 / 2024 .

உனக்கும் எனக்கும்
கட்டில் போர்க்களத்தில்
நித்தம் நடக்கும்
காதல் யுத்தம்...
பார்வை அம்புகள்
கேள்வி கணைகள்
நகக் கடாரிகள்
மௌன வெடிகளுடன்
இதழ் தேன் மதுவுண்டு
இடையில் நடக்கும்
மல்யுத்தப் போரில்
முத்தக் கன்னிகள்
வெடிக்க.... பெருகும்
வியர்வை வெள்ளத்தில்
வெற்றி யாருக்கு?
தோல்வி யாருக்கு?
வினோத முடிவு
தோற்றவர் வெற்றியடைகிறார்.
வெற்றியாளர் தோற்கிறார்.
கசங்கிய மாலையும்
உதிர்ந்த பூக்களும்
கௌரவிக்கப்படுகிறது.
ஒரு சந்ததி
உருவாக்கப் படுகிறது.
ஒரு சரித்திரம்
தொடங்கப் படுகிறது.
ஒரு கவிதை
எழுதப் படுகிறது
ஒரு காவியம்
படைக்கப் படுகிறது.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (10-Sep-24, 7:09 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 96

மேலே