காதல் என்பது எதுவரை

உத்தமி அவள்
உள்ளாடும் காதலை

ஊரறிய ஒருநாளும்
உரக்க சொன்னதில்லை

உரைப்பதற்கும் நேரமது
உதவியதாக தெரியவில்லை

உறங்காமல் உழைகின்றாள்
உறவுகளின் நலம் விட்டதில்லை

கள்ளமகள் அவள் காதலை
கண்களிலே அறிகின்றேன்

காலமெல்லாம் கண்மணிக்கு
காவலாக விழைகின்றேன்

முடிச்சுப்போட்டு வந்த காதலிது
மூச்சின் இறுதிவரை தொடர்ந்திடுமே!

முழுமை பெற்ற காதலெல்லாம்
முதுமை வரை வந்திடுமே

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (10-Sep-24, 8:01 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 86

மேலே