உயிர் நிலையானது

ஏதும் நமக்கு இல்லை
யாரும் நமக்காக இல்லை
அடையாளம் மாறிக்கொண்டே இருக்கும்
சார்ந்தவர்கள் எல்லாம் பிரிய நேரிடும்
சாவையும் ஒரு நாள் அடைய நேரிடும்
சதையும் சாம்பலும் கலக்கும் மண்ணில்
உடலற்ற உயிர் பழமை மறந்து
உடல் தேட தொடங்கும்
உயிருக்கு பிறவி என்பதே இல்லை
உயிர் நிலையானது
உடல் விட்டு உடல் மாறி
அடையாளங்கள் அனுபவங்கள் மாறி
உயிர் வாழ்ந்துகொண்டே இருக்கும்..,

எழுதியவர் : சிவர்த்தி (13-Sep-24, 12:15 pm)
சேர்த்தது : சிவா
Tanglish : uyir nilaiyaanathu
பார்வை : 144

மேலே