அவள் ஒரு நம்பிக்கை

#அவள் ஒரு நம்பிக்கை*

பெண்ணே....!
நேற்று வரை
கண்ணாடியில்
என் உடலின் அழகைத்தான்
பார்த்திருந்தேன்.....

உன்னில் தான்
முதன்முதலாக
பார்க்கிறேன்
எனது ஆன்மாவின் அழகை....

நம்பிக்கையோடு
வாழ் என்று சொன்னார்கள்
உன் கைப்பிடித்தப் போது தான்
உணர்ந்தேன்
என் நம்பிக்கையே
நீதான் என்று.... .

நான்
எதை எதையோ
கவிதையாக்கி இருக்கிறேன்....
என்னையே
கவிதையாக்கியது
நீ தான்.....!

அதிர்ஷ்டம்
எல்லோருடைய
வீட்டுக் கதவையும்
ஒரு முறை
தட்டும் என்பார்கள்.....
என் வாழ்க்கையில்
நான் தான்
அதிர்ஷ்டத்தின்
கதவைத் தட்டினேன்
அந்த அதிர்ஷ்டம் நீதான்....

உன் வார்த்தைகளால்
என்னை
தூய்மைப்படுத்தினாய்....

என் வாழ்க்கைத்தேரில்
நீயே வடமானாய்...

என்னையே !
நீ எனக்கு
அறிமுகம்
செய்து வைத்தாய்......

நான் சாதிப்பதற்கு
முயற்சி
தன்னம்பிக்கை
திறமை
எதுவும் தேவையில்லை
நீ...!
என்னருகில்
இருந்தால் போதும்......!!!

கவிதை ரசிகன் குமரேசன்

❣️💜❣️💜❣️💜❣️💜❣️💜❣️

எழுதியவர் : கவிதை ரசிகன் (14-Sep-24, 8:57 pm)
Tanglish : aval oru nambikkai
பார்வை : 101

புதிய படைப்புகள்

மேலே