கீதை வெண்பா 4 வது அத்தியாயம் ஞானகர்ம ஸந்நியாச யோகம் 3 பா 11 12 13 14 15
11 .
எவ்வாறு யார்யார் வழிபடுகின் றார்களோ
அவ்வாறே நல்குவேன் என்னருள் தன்னை
மனிதர்கள் என்வழிபின் பற்றுவர் என்றும்
இனியபார்த்தா எப்படியு மே
12 .
கர்மபலன் வேண்டுவோர் தேவதையைப் போற்றுவர்
கர்மபலன் இம்மையில் தான்எளிதில் கிட்டிடும்
கர்மபலன் வேண்டி மனிதவுல கில்மாந்தர்
கர்மமாற்று வர்நாளு மே
13 .
கர்மகுண பேதத்தால் நால்வருணத் தைப்படைத்தேன்
கர்த்தா அவற்றிற்கு நான்தான் எனினும்
அகர்த்தா எனவும்அப் பாற்பட்டோன் என்றும்
சகோஎன்னை நீஅறி வாய்
14 .
கர்மங்கள் என்னைத் தொடுவதில்லை மற்றிந்த
கர்மம்நல் கும்பலனில் பற்றுமில் லைஎனக்கு
கர்மத்திற் கப்பாற்பட் டோனெனஎன் னையறிவான்
கர்மத் தினால்கட்டுண் ணான்
15 .
முன்னாளில் முக்தியை நாடுவோர் செய்வினையை
முன்னோர் வழிநின்று நீயுமே ஆற்றிடுவாய்
பின்னாள் வழித்தோன் றலே