பல்கார் வேணும்
ஏண்டா நாக்குராசு உன்ற பையன்
பீக்காரில் இருந்து வந்திருக்கிறானாமே?
@@@@@
ஆமாம் பாட்டி. அங்க போயி பீகார்
பொண்ணு ஒருத்தியைத் திருமணம்
பண்ணீட்டான். அங்க பேசற மொழியையும்
கத்துட்டான். அவன் வேலை பார்க்கிற
ஊர்ல தமிழர்கள் யாரும் இல்லையாம்.
ஏறக்குறைய தமிழே அவனுக்கு மறந்து
போச்சு. அவன் பேசறது அரை
குறையாத்தான் புரியுது.
@@@@@@@
நம்ம சனங்க இல்லாத ஊர்லே நாம பேசற
மொழி கொஞ்சம் மறக்கத்தாண்டா
செய்யும் நாக்குராசு.
@@@@@@@
ஆமாம் பாட்டி. வந்ததிலிருந்து "பல்கார்
வேணும். பல்கார் வேணும்" -ன்னு
கேட்டுட்டே இருக்கிறான். பல்கார்ன்னா
என்னன்னெ தெரியல. மகன்
ஆசைப்பட்டதை நான் எங்க போயி
வாங்கிட்டு வருவேன்.
@@@@@@@@
அட கூறுகெட்ட நாக்குராசு உன்ற பையன்
என்ன கேட்கிறான்னே புரியாத
தகப்பன்டா நீ. அவன் கேட்கிறது
பலகாரம்டா. அவன் கத்துகிட்ட பீக்கார்
மொழி பாதிப்பிலே பலகாரத்தை 'பல்கார்,
பல்கார்'ன்னு சொல்லறான்.
@@@@@@
இவ்வளவு வயசு ஆகியும் இதைப்
புரிஞ்சுக்காம இருந்துட்டேனே.

