நீள்நீலத் தார்வளவன் நின்மேலான் ஆகவும் - முத்தொள்ளாயிரம் 40
இன்னிசை வெண்பா
நீள்நீலத் தார்வளவன் நின்மேலான் ஆகவும்
நாணிமை யின்றி நடத்தியால் – நீள்நிலம்
கண்தன்மை கொண்டலரும் காவிரி நீர்நாட்டுப்
பெண்தன்மை இல்லை பிடி! 40
- முத்தொள்ளாயிரம்
பொருளுரை:
அடி! பெண்யானையே! வளவன் ஒரு ஆண். அவன் உன்மேல் இருக்கிறான். அவனைச் சுமந்துகொண்டு, வெட்கம் இல்லாமல் வருகிறாயே! காவிரி நாட்டுப் பெண்-தண்மை உனக்கு இல்லை. நீல மலரால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலையை வளவன் அணிந்து கொண்டு வருகிறான். கண்ணோட்டம் கொண்டு உலகைக் காத்து மலரும் நாடு காவிரியாறு பாயும் நாடு!

