என் நட்பு பொய்க்காது.. !
எந்த குளிரிலும்
அவள் சுவாச சூடு மட்டும்
தணிவதில்லை..
எந்த இருட்டிலும்
அவள் நியாபக ஒளி
என்னில் அணைவதில்லை..
எந்த பயணத்திலும்
அவள் நினைவுகளின் இருக்கையை
எவரும் பறித்ததில்லை .
.
எவர் தடுத்தாலும்
என்னோடு வலம் வரும்
அவளின் நேசம் .
வானளவு கொட்டி தந்த
அவள் பாசம் ..
அத்தனையும் இனி
வார்த்தைகளால்
உலகத்திற்கு விளக்க
அவள் மீதான நம்பிக்கை
இன்னும் பொய்த்துவிடவில்லை...! ..

