நட்பு ..

இதயத்தில் விழுந்த
விதை நீ !
இன்று மரமாய்
வளர்ந்ததே ..
ஆனால் வளர்ச்சி என்ற
பாதையில் கைக்கெட்டாத
தூரத்தில் நீ ....
பிரிவு என்ற இலையுதிர்
காலம் துரத்தினாலும்
ஆழமாய் பற்றியிருக்கிற
வேர்களாய் உன் நினைவுகள் ..
வசந்தமே வீசும் - இதில்
பிரிவு ஒரு வேதனையல்ல
அன்பின் ஊற்று
வெட்ட வெட்ட வளரும்
மரம் போல
என்றும் வளர்க்கும்
நம் நட்பை ...

எழுதியவர் : கே. அமுதா (8-Nov-11, 12:48 pm)
Tanglish : natpu
பார்வை : 1565

மேலே