முயலவும் என் மனம் விரும்பாது..

கல்லாய் மாறிப்போன
என் கற்பனையை
உளியாக இருந்து செதுக்கி

என்னை மீண்டும்
கவிஞன் ஆக்கிய
சிற்பியே...

எங்கனம் உன்னை நான் மறப்பது...

நன்றி மறப்பது நன்றன்று அல்லவா!!

பின்
எங்கனம் உன்னை நான் மறப்பது..
முயன்றாலும் முடியாது;
முயலவும் என் மனம் விரும்பாது!!

எழுதியவர் : மதிநிலா (18-Nov-11, 10:46 pm)
பார்வை : 286

மேலே