ஒரு பயணத்தின் கதை...

அவசர பயண முடிவுகளில்
பெரும்பாலும்
இரயில் பயணம் சாத்தியமில்லை...

பேருந்தில் இருக்கை வேண்டும்
அதைவிட அருகில்
பெருத்த உடல் இல்லா
ஒருத்தர் வேண்டும்...

உணவு தண்ணீர் எடுத்து
உணர்வோடு வைக்க வேண்டும்
இல்லையெனில்
உணவகங்களுக்கு ஒரு நூறு
அழுதாக வேண்டும்...

சிரித்த முகத்துடனே நடத்துனர்
சில்லரை தரவேண்டும்
சேரும் நேரம் கேட்டால்
சீராத ஓட்டுனர் வேண்டும்

ஏழையாய் இருந்தாலும்
இவையோடு சேர்ந்து இப்பொழுது
இருமடங்கு கட்டணமும் வேண்டும்...

அத்தனை இடர்படுகளும்
அர்த்தமற்றதாகி போகின்றன‌
அன்பு நிறைந்த
உறவுகளை பார்க்கும்போது...

மீண்டும் அதே பயணம்
மாறாத அதே அழுத்தங்கள்
இருந்தும் தயாரகிறோம்
அடுத்த பயணத்தை நோக்கி
சொந்த ஊரின் சுகத்தை அனுபவிக்க....!

எழுதியவர் : தினைக்குளம் கா.ரமேஷ், பரமக (19-Nov-11, 11:10 am)
பார்வை : 288

மேலே