நான் விரும்பும் கவிதை

வந்தனைக்கு ஒரு தெய்வம்
சிந்தனைக்கு ஒரு கவிதை
செயலுக்கு சேவை
மலர் விரிந்திருந்தாலும்
முள் படர்ந்திருந்தாலும்
தடைகள் குறிகிட்டாலும்
வழி நடந்திட ஒரு பாதை
சோர்வில்லா ஆர்வம்
முயற்சியின் அயர்வில்லா தோள்கள்
அந்தப் பாதையின் எல்லையில்
நான் முத்தமிடும் வெற்றி
அந்த வாழ்க்கைப் பாதை
நான் விரும்பும் கவிதை
----கவின் சாரலன்