குளிர்க்காலம், சூடான காலை உணவுநேரம் (அ) அர்த்தமுள்ள அழகுகள்

காலம்
குளிர்க்காலம்

அதிகாலைச் சூரியன் முகம்காட்ட
தாவர இதழ்களில் தேனூற்ற

தேகங்கள் இரண்டும் சிலிர்ப்பூட்ட
சிறு தேன்நிலவு ஆங்காங்கே முகம்காட்ட

வெளியே விறகுகள் அனல்கூட்ட
சிறு பிள்ளைகள் விளையாட்டில் நகை கூட்ட

பெரியோர்கள் வெளியே கால்நடை கூட்ட
பாதையில்
புதுநபரின் நட்போடு
நகைச்சுவை, அரசியல் நெடிகூட்ட

இத்தகைய
அர்த்தமுள்ள அழகுகள்
வாழ்விற்கு நாள்கூட்ட - உணவு
ஊட்டுவோம் உடலுக்கு நீண்டகாலம் உயிரூட்ட

இனி ஆரம்பம்,
உடல் சுத்தம் முடிந்த
சூடான காலை உணவுநேரம்,
புத்துணர்வுகொள்ளும் வேலைக்காலம்.


எழுதியவர் : A பிரேம் குமார் (20-Nov-11, 12:23 pm)
பார்வை : 339

மேலே