கருணை மழை..!
கருணைமழை பொழிந்து
கவலையெலா மழித்து
காட்சிதந்தா லழகு!
அருளை வேண்டிவரும்,
அன்ப ரனைவருக்கும்
அருளை யள்ளி வழங்கு -தாயே!
அருளை யள்ளி வழங்கு
பொருளை நாட வில்லை,
பொன்னைத் தேடவில்லை
புகழில் நாட்டமிலையே
இருளை நீக்கு மந்த
இனிய யெழில் விழியின்
ஒளியை மட்டும் கூட்டு-தாயே!
ஒளியை மட்டும் கூட்டு.
பொறுமை கொண்டு வுனைப்
போற்றுகின்ற நெஞ்சிற்
புகுத லினிய வொன்று
சிறுமை நீங்கி யவர்
சிறந்த வாழ்வு பெற
செல்லும் வழியைக் காட்டு-தாயே!
செல்லும் வழியைக் காட்டு.
பெருமையோடு நின்
பேர் சொல்லும் வேளையிற்
பிணிகளேது எமக்கு
கருணை கொண்ட விழி
காட்டும் நல்ல வழி
காண திசையைக்காட்டு-தாயே
காண திசையைக் காட்டு.

