ஆணுக்கும் கற்பு அவசியம்
பெண்மையின் கற்பை பற்றி மட்டும்
அதிகராமிடும் ஆண்மைகளே
உங்களுக்கும் கற்பு அவசியமே....
சலேரென நான் இயம்பிய
இக்குற்றால் உங்கள் ஆண்மைகள்
என்னை பார்த்து நகைக்கலாம்
உண்மையை பகிர்ந்தால்
நகைத்த உங்கள் ஆண்மை
பதுங்கிவிடும் மெல்ல ஆமையை போல்
சிலப்பதிகார நாயகன் கோவலன்
தன் மனைவி கண்ணகி இருக்க
பரத்தை மாதவியை கவர்கொண்டான் ;
அவளுடன் தன்னிலை மறந்து
குடிக்களிப்புற்றான்
அவன் கரம் பிடித்த கண்ணகியை
காலமெல்லாம் அழவைத்தான்.
அதற்கு தண்டனையாக
கள்வன் என பெயருடன்
கொலைக்களம் பூண்டான்
கண்ணகி வாழ்வை இழந்தாள்;
அவன் தந்தை துறவு பூண்டார் ;
தாயோ உயிர் துறந்தாள்;
கண்ணகியை பெற்றவனும் துறவு பூண்டான்;
அவள் தாயோ மானமே பெரிதென்றெண்ணி
தானாகவே உயிர் துறந்தாள்;
வழித்துனைவரான கவுந்தியடிகள்
உண்ணாவிரதமிருந்து வானுலகம் அடைந்தார்;
கண்ணகிக்கு அடைக்கலம் தந்த
இடைக்குலச்சி மனம் வருந்தி
தீக்குளித்தாள்
பாண்டிய வேந்தன் செங்கோல்
பிரழ்ந்ததால் உயிர் விட்டான்;
கணவனே தன் கண்கண்ட தெய்வமென
வணங்கும் பாண்டிமா தேவி
கணவன் வழி சென்றாள்.
மதுரையை தீயுண்டது ;
பூம்புகாரை கடலுண்டது
கற்புக்கரசன் கோவலன்
கற்பை இழந்ததால்
நாடே அழிந்தது ;
சரித்திரமும் மாறியது
முன்னையதில் நகைத்த ஆண்மைகளே
இப்போது இயம்புங்கள்
உங்கள் ஆண்மை , அதிகாரம்
ஆமையை போல் மெல்ல
பதுங்கிவிட்டதல்லவா...????