காந்தி பூங்கா காலை 7 மணி
இளவேனிற் காலை பொழுது
குழந்தைகளின் பால்பற்கள் தெரியும் சிரிப்பைப்போல மலர்கள் பூத்து குலுங்கும் நந்தவனம்
பொன்னைதீயில் வார்த்தது போல தூரத்தில்
செஞ்சூரியன் பாதிமட்டுமே பார்வையில் . . .
மணக்கும் மல்லிகையோடு
மயக்கும் என்னவள் என்னுடன்
குளித்த தலையின் கூந்தல் வாசத்தோடு . . .
என் வலகரங்களும் அவள் இடக்கரங்களும்
அவளின் ஜடைபோல பின்னியபடி
மெல்லிய நடைபயணம்
ஆள் அரவமில்லா அந்த அமைதிபூங்காவில் . . .
அவள் குளித்துவிட்டு வரும்போது
அவள் ரோஜா இதழ்களில் படித்திருக்கும் நீர்த்துளிகள் போல
நந்தவனத்து ரோஜா இதழ்களிலும் பனித்துளிகள் . . .
அந்த பனிதுளிகளையெல்லாம்
என் உள்ளங்கையில் சேகரித்து
விளையாட்டாய் அவள் முகம் தெளித்துவிட
தண்ணீர் தெளித்த முயல் போல திடுக்கிட்டாள் . . .
பிறகென்ன சூரியகற்றைகளாய்
என் பார்வைகற்றைகள்
பாவம் பனித்துளிகள் என்னாகும்
வேறென்ன பனித்துளிகள் அனைத்தும்
என் இதழ்களுக்கு இரையாயின . . .
பாகிஸ்தான் தீவிரவாதி போல
ஈரமில்லாத பச்சை புல்வெளி பார்த்தமர்ந்தோம்
அவள் மடிமீது என்தலைவைத்தபடி
அவள் கண்ணாடி வளைக்கரம் மெல்லிய சிணுங்கள்கலுடன் என் தலைகோதுகிறது . . .
அவள் கனிவான காதல் மொழிகள்
இளையராஜாவின் இந்நிசைகீதமாய்
என் காதுக்குள் தேன் பாய்ச்சுகிறது
சதீஷ் நீ என் சதீஷ் தானே சொல்லுடா செல்லம்
ஏழேழு சென்மத்திர்க்கும் நீ எனக்கு வேணுமடா - இது அவள் . . .
காமினி இந்த சொர்க்கம் ,சொர்க்கம்னு சொல்லுவாங்களே அது இது தானா - இது நான் . . .
இந்த ரம்யமான நேரத்தில்
சிவபூஜையில் கரடி என்பார்களே அதைபோல
என் கைபேசியின் கதறல்கள்
சூறைதேங்காய் ஆகப்போன என்கைபேசியை
தடுத்தாட்கொள்கிறாள் என் தங்கத்தாமரை . . .
நான் வேலைசெய்யும்
software கம்பனிலிருந்து என் பாஸ்பேசுகிறார் !
எவ்வளவு சிபாரிசுகளுகிடையில் இந்தவேலை
உனக்கு கிடைத்தது இப்படி பொறுப்பில்லாமல்
ஏழு நாட்களாக லீவ்போட்டுவிட்டு
காதலியுடன் ஊர்சுற்றும் உனக்கு இனி
இந்த கம்பெனியில் இடம்மில்லை . . .
என்னவள் விபரமரிந்தால் எழுந்தால்
sorry சதீஷ் இனி நாமசந்திக்க வேண்டாம்
நம்ம விஷயம்வீட்டிற்கு தெரிந்துவிட்டது
U.S - ல வொர்க் பண்ற தாஸ் கூட எனக்கு FIX ஆகிடுச்சு
Bye சதீஷ் Bye . . .
காமினி நில்லு காமினி pls - - - , - - - -
பூக்களுக்கு தண்ணீர் பீச்சுகிற பெரியவர்
அய்யா ராசா
அவதான் அவ புத்திய காமிச்சிட்டு போராளே
பொறவு ஏன்டா அவ பெயர short டா கூப்பிட்டு இப்புடி ஷாக் ஆவுற போயி உருப்படுற வழியபாருடா ராசா .