"மனதைத் தொட்ட மனநலம் குன்றியவர்கள் உண்மைக் கதை".....
அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தனர்.
ரெடி, ஸ்டிடி, கோ..
விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு அனைத்துக் குழந்தைகளும் ஓட தொடங்கினர்.
ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடீரென்று கீழே விழுந்தது.
கீழே விழுந்தது அடிபட்டக் காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.
பின்னால் ஏதோ அழுகை சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அனை த்துக் குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.
அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.
"இப்போ வலி போயிடிச்சா" என்று.
அதை பார்த்த மற்ற அனைத்துக் குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.
பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கினார்கள்.
பின்னர் அந்த "குழந்தையை"யும் தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடினார்கள்.
அதை பார்த்த விழா குழுவினரும், பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டினார்கள். கண்டிப்பாக அவர்கள் தட்டிய கரவொலி அந்த கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.
ஆமாம். இது உண்மை.
இது நடந்தது வேறு எங்குமில்லை. நம் இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சி, மனதை தொட்ட, மறக்க முடியா நிகழ்ச்சி.
அந்த விழாவை நடத்தியது "மனநலம் குன்றியவர்"களுகான தேசிய நிறுவனம்.
அதில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவரும் "மனநலம் குன்றியவர்கள்".
ஆம். அவர்கள் மனத்தால் குன்றியவர்கள்.
ஆனால் குணத்தால்..?????
இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன???
மனித ஒற்றுமை...
மனித நேயம்...
மனித சமத்துவம்...
வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாக மாட்டார்கள் என்பதை தெளிவாக நன்கு உணர்த்தினார்கள்.
நம்மில் பலர் இதை செய்வதில்லை...
ஏன்...???
நமக்கு "மூளை இருப்பதனால்".... மூடர்களாகவும் முரடர்களாகவும் முடங்கி உள்ளோம்.....
ஆதலால் ஒன்றை நினைவில் கொள்வோம்...
"அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும் என்றும்" என்பதை...
செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு,
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.