"மனிதனா மிருகமா"


மதத்திற்கே மதம் பிடிக்கும்
அளவிற்கு மதம் பிடித்திருக்கும்
மனிதனைவிட..,
மதம் பிடித்தாலும் தன் கோவத்தை
தன் இனத்தின்மேல் காட்டாமல்
தன் இடத்தின்மேல் காட்டும்
யானையே எனக்கு மேல்......

தன் பொண்டாட்டி பிரசவத்துக்கு
போன பின்னே பிற சுகத்துக்கு போகும்
மனிதனைவிட.....,
ஒரு விலங்கு கருவுற்றதும்(உடலுறவுக்காக) பக்கத்தில் செல்லாமல் பண்பாக
பார்த்துகொள்ளும் விலங்குகளே எனக்குமேல்.....

தன் வீடு தன் மக்கள் தன் குடும்பம்
என வாழும் சுய நலக்காரனை விட
பாதித்தீனி கிடைத்தாலும் பகிர்ந்துண்டு
வாழும் காகமே எனக்கு மேல்.......

குழந்தையை பாரமென்று எண்ணி
கால் ஊனமுடியா வயதிலேயே
கான்வென்ட்டுக்கு அனுப்பி வைக்கும்
மனிதனைவிட.....,
கால் வளர்ந்தபின்னும்
தன் குழந்தையை வயித்திலே சுமக்கும்
கங்காருவே எனக்கு மேல்.......

மனிதநேயத்தோடு மனசார
சோறு போடுவான் ஒருத்தன்,
உண்ட உப்பு உரைக்கும் முன்னரே
உணவு போட்டவனையே
போடுவான்(அடி,வெட்டு) இன்னொருத்தன்,
இவர்களைவிட.....,
ஒருமுறை ஒருபொறை(வருக்கி) போட்டால்
ஒருவாரம் வீட்டு வாசலில் கெடக்கும்
நாயே எனக்குமேல்.......

மனைவி இறந்தவுடன் மறுமணம் என்று
ஆரம்பிக்கும் மானங்கெட்டவனைவிட.....,
மனைவியோ கணவனோ தன் துணையை
இழந்ததும் உடனே இறந்து போகும்
நரிகளே/புறாக்களே எனக்கும் மேல்
எனக்கும் மேல்..............!

மனம் அடிக்கடி அடிக்கு அடி மாறுது,
போதை தலைக்கு ஏறுது,

நேருக்கு நேர் மார் ஓடுது,
நேர்மையில்லாமல் வாடுது,

கண்கள் கண்ணீரால் தளும்புது,
அதுவா இதுவா என புலம்புது,

அதையும் இதையும் தேடி போவுது,
அங்க இங்கன்னு தாவுது,
தாவித்தாவி காலெல்லாம் நோவுது,
கடைசியில எல்லாத்தையும் இழந்து சாவுது...!

=========================================
மேற்படி பார்க்கப்போனால் மனிதனைவிட
மிருங்கங்கள் மதிக்கபடுபவையாக உள்ளன
ஆதலால் நான் மிருகமாக இருப்பதில்
பெருமையே எனக்கு.........
=========================================
{குரங்கிலிருந்து வந்தவர்கள் தானே நாம்
பின்பு நம் குணம் மட்டும் எப்படி வேறாகும்}
````மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு````

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (30-Nov-11, 8:57 pm)
பார்வை : 447

மேலே