புதிய தலைமுறை !
முன்னேற்றத்திற்கு "கல்வி"யை
விதைத்துவிட்டு நாங்கள் - இன்று
முழுமையான அறுவடை "வேலை"க்கு
எதிர் கொண்ட புதிய தலைமுறைகள் !
எண்ணங்களை நிறைவேற்ற அன்று
கடின உழைப்புதான் "மட்டும்"
இந்த கல்லூரி எங்களுக்கு தந்தது
அந்த முகவரி "பட்டம்"
கோடிகளை கொட்டி இங்கே வருடம்
பொறியாளர்கள் "உதயம் "
வேலை தேடி அலையும் எங்கள்
விழுக்காடுகள்தான் "அதிகம் "
நேர் காணலுக்கு நாங்கள்
செல்லும் அந்த "மகிழ்ச்சி "
கூப்பிடுகிறோம் என்ற அந்த
பதில்தான் இன்னும் "இகழ்ச்சி"
வல்லரசு நாடு இந்தியா என்பது
வெறும் வார்த்தையில் மட்டும்தானா
வழி மேல் விழி வைத்து
வைகறை நோக்கி இந்த "புதிய தலைமுறைகள்"
-ஸ்ரீவை.காதர்-

