அட்சயப் பாத்திரமாய்... நீங்கள் மட்டுமே...!!!

ஏ!!!... காகிதங்களே...
தனிமைதான்...
ஆனால்...
எனக்குத் துணையாய்
நீங்கள் மட்டுமே!...

இன்பமோ?!!... துன்பமோ?!!...
அவையிரண்டும்
உங்களுடன் மட்டுமே!!!...

ஆறுதலாய்
ஒரு வார்த்தையில்லை
ஆனால்...
ஓராயிரம் மனச்சுமைகளை
இறக்கி வைக்கும்
அட்சயப் பாத்திரமாய்
நீங்கள் மட்டுமே!!!...

நீங்களும்...
நண்பர்கள் தான்!!!...
என் எண்ணங்களை...
முழுமையாக...
உங்களுடன் பகிர்ந்து கொள்வதினால்...

மனதிலே மலர்ச்சி
உங்களுடன் உணர்வுகளைப்
பகிர்ந்து கொண்ட பின்னர்!!??!!...
என்றும் எனக்குத்
துணையாய் நீங்கள் மட்டுமே!!!
உங்களுடன் இணைப்பாய்
எழுதுகோலும்!!!...

வெள்ளைக் காகிதங்களே!...
நீங்கள் வெறும் காகிதங்கள் அல்ல!!...
என் மனச்சுமைகளைத் தீர்க்கும்...
அட்சயப் பாத்திரம்!!!...

ஆறுதலாய்
ஒரு வார்த்தையில்லை
ஆனால்...
ஓராயிரம் மனச்சுமைகளை
இறக்கி வைக்கும்
அட்சயப் பாத்திரமாய்
நீங்கள் மட்டுமே!!!...

-நிலா தோழி...







எழுதியவர் : நிலா தோழி... (9-Dec-11, 12:17 am)
பார்வை : 440

மேலே