எண்ணம் போல் வாழ்க்கை...

மனிதர்களின் குணங்கள் நிறமாய்தான் மாறுகின்றதோ...

வண்ணங்களின் வர்ண ஜாலமாய் மாறுகின்ற..

குணாதிசயங்கள்...

சுமைகளை உள் விழுங்கி வெளி புன்னகையை உதிர்க்கும் முகங்கள் ஒருபக்கம் ....

கண்ணீரில் துன்பம் கரைத்து கனவினில் ந்மிம்மதி தேடும் முகங்கள் மறு பக்கம்...

தோற்றுவித்த இறைவனை தூற்றுகிறோம்...

விதிவசத்தால் வாழ்கையின் பிரதிபலிப்புகள் நம் வாழ்கையின்
எண்ணங்களுக்கேற்ப அமையா வண்ணம்...

ஆண்டவனை நிந்திக்கும் ஆட்டு மந்தைகள் போல் ...
அடைபடுகிறோம் ஏதோ ஓர் நிலையில்...

கடவுளோ, காலமோ, விதியோ,மதியோ ....

வாழ்வை தீர்மானிப்பது நம் எண்ணங்கள் மட்டும் என்பதை யார் அறிவார்???

எழுதியவர் : காளிதாசன்... (17-Dec-11, 4:30 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 2092

சிறந்த கவிதைகள்

மேலே