என்று தணியும்?
சிறு பிராயத்தில் சின்னச் சின்ன போட்டிகளில்
வெற்றி பெற்றே ஆக வேண்டும் பள்ளியில்
கல்லூரியில் நல்ல மதிப்பெண்கள்
பெற்றே ஆக வேண்டும்
நல்ல வேலையில் சேர்ந்து
சம்பாதித்தே ஆக வேண்டும்
திருமணத்தில் குழந்தைகள் பெற்றே
தீர வேண்டும்
கோமாளிக் கூத்தாக பெற்றோருக்காக
அன்று ஆட ஆரம்பித்தது...
விளையாட விட்டால் போதுமே என்ற ஏக்கம்
ஆளை விட்டால் போதுமே என்ற தவிப்பு...
ஏதோ ஒன்றை நோக்கி ஓட பயின்ற மனம்
சும்மா இருப்பதை இன்று விரும்புவதில்லை...
எங்கோ எதிலோ தொலைந்து போய்
எதையோ தேடிக் கொண்டு இன்றும்...

