நட்பு
தன்னுயிரை ஈனுவது நட்பு
தன்னகத்தே பேணுவது சிறப்பு
தாய்மைவிட சிறந்தது கற்பு
தன்னிகரில்லா உவப்பே நட்பு
எங்கோ பிறந்த இருவருக்குள்
ஏற்படும் உன்னத உணர்வு
ஏதொ இப்புவிக்கு இறைவன்
ஏகாந்தமாய் தந்த நல்லியல்பு
உன்னைவிட உன்னை பற்றி
உன் தோழனிடம் கருத்து கேள்
உன்னுணர்வு நீயறியாதவற்றை
உனக்கே அறிய செய்யும் நட்பு....!