விதை பேசும் பெண்மை

நட்டுவைத்து நீருற்றி
அழகாக வெளி அமைத்து

கண்ணும் கருத்துமாய்
10 மாதம் காத்திருக்கும் அன்னைக்கு

முளைத்த பின்பு தான் தெரிந்தது
இது பெண் என்று

10 நொடி கடன் கேட்டு
பசும் செடிதான் பேசியது

என்னை நீயும் வளரவிட்டால்
நான் நிழல் தரவும் மாட்டேனோ

விறகாகவும் சருகாகவும்
எரிந்தேனும் உனக்கு உதவமட்டேனோ

கல்லால் அடித்தாலும் வாங்கிக்கொண்டு
கனிதரவும் மாட்டேனோ

அமைதியாக கேட்டதினால் என்னை
அரவணைப்பாள் என்று நினைத்தேன்

அவளோ பத்து நொடி முடிந்ததென்று
பட்டென ஒடித்து எறிந்தாள்

பல மைல் தொலைவில் சென்று விழுந்த
பின்புதான் புரிந்தது 10 நொடியே எனக்கு
அதிகம் என்பது.

எழுதியவர் : yasmeen (26-Dec-11, 1:02 pm)
சேர்த்தது : Yasmeen
பார்வை : 251

மேலே