----தமிழினி மெல்லச் சாகும்----
----தமிழினி மெல்லச் சாகும்----
தமிழ் பேசுவது
கவுரவ குறைச்சல் என
கருதும்
தமிழர்கள் வாழும்
தேசமிது...
முயற்சித்தால்
வேற்று மொழிக்காரர்களை கூட
வெகு விரைவில்
துய தமிழில்
பேச வைத்துவிடலாம்...
தமிழர்களை
தமிழ் பேச வைப்பதுதான்
கடினம்.
அடுத்த தலைமுறையில்
குழந்தைகள்
மம்மி என்று கத்தி கொண்டே பிறக்கும்...
உன் தாத்த ஒரு தமிழர் என
பாட்டிகள் கதை சொல்லலாம்...
இனி
வீரமாமுனிவர்கள் தான்
தமிழை தத்தெடுத்து கொள்ளவேண்டும்.
--தமிழ்தாசன்---
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
![](https://eluthu.com/images/common/down_arrow.png)