அம்மா

என் வாழ்வில் வந்த
வசந்தம் நீ
உன்னுடன் வாழ்வதால்
அதை நான் உணர்கிறேன்

என் வெற்றி சரித்திரத்தின்
முதல் பக்கம் நீ
என்றும் வெல்வதால்
அறிந்து கொள்கின்றேன்

என் எதய துடிப்பின்
முதல் துடிப்பு நீ
என்றும் துடிப்பதால்
உன்பெயர் சொல்கிறேன்

என் சுவாச குழலின்
முதல் சுவாசம் நீ
இன்றும் அதனால்
உயர் வாழ்கிறேன்

என் நடைபயணத்தின்
முதல் படி நீ
பதைகாட்டியதல்
பயணம் செய்கிறேன்

என் கை பிடித்த
முதல் பேனா நீ
அகரம் போட்டதால்
சிகரம் ஆழ்கின்றேன்

ஆதி உலகின்
ஆதாரமும் நீ
அம்மா என்பதால்
புனிதம் அடைகின்றேன்.

எழுதியவர் : ராஜா Suthan (6-Jan-12, 5:32 pm)
Tanglish : amma
பார்வை : 314

மேலே