எனக்கான நண்பன்....
எனக்கு கிடைத்த அன்பான நண்பன் நீ....
நீ நடந்து கொள்ளும் விதங்கள்..,
நல்ல நண்பனுக்கான இலக்கணங்கள்...
என் பிடிவாத குணங்களை உன் நட்பால்..
அழகாய் திருத்தினாய்....
உன்னோடு நான் நடந்து செல்லும் போது...
என் பாதைகளில் நட்பு பூக்கள் அழகாய் மலரும்...
விடிந்தும் விடியாத என் வாழ்கை பொழுதுகள்,
உன்னால் தினம் தினம் புதிதாய் மலர்கிறது...
உன்னோடு பேசும் நேரங்கள்..
எனக்கு கிடைத்த பொக்கிசங்கள்..
என்னை எனக்கே புதிதாய் அறிமுக படுத்தியவன் நீ...
என் வாழ்வில் பட்ட காயங்களுக்கு
உன் நட்பெனும் மயில் இறகால், அழகாய் வருடினாய்...
நீ காட்டும் வேடிக்கைகள், நீ சொல்லும் கதைகள்,
உன் சிரிப்பு... எல்லாம் என் நினைவு பூங்காவில்..
அழியாத சின்னங்கள்....
உன் குழந்தை தனங்கள் பிடிக்கும் என்றாய்...
ஒரு குழந்தையாய் ஆனது அத்தருணம் தான்...
உன் நட்பு பிடிக்கும் என்றாய்....
உன்னோடு ஒப்பிடுகையில் கொஞ்சம் குறைவு தான்
என்று மனதிற்குள் எண்ணி கொண்டேன்...
ஒவ்வொரு செய்கையால்... என் நட்பு புத்தகம்..
உன் அன்பால் நிரம்பி வழிகிறது....
உன் நட்பை மிக மிக நேசிக்கிறேன்...
என் உயிரை விடவும்...
உன்னை படைத்தவன் கேட்டாலும் என் உயிரை கூட,
விட்டு கொடுப்பேன்...
உன்னை அல்ல ஒரு நாளும்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
