நாராயணா எனும் நாமம்
![](https://eluthu.com/images/loading.gif)
அறுந்த பல்லிவால் போல்
இல்லை இல்லை என்று
துள்ளித் திரிவதில்
அறிவிலி மானிடனே
என்ன லாபம்
தூணைப் பிளந்து அரக்கன்
மார்பை பிளந்தவன் -உன்
ஊனை பிளந்திட ஒவ்வொரு முறையும்
அவதாரம் எடுத்து வரமாட்டான்
ஆதலினால் உணர்ந்து ஓதிடுவாய்
நாராயணா எனும் நாமம்
----கவின் சாரலன்