கதை கேளு கதை கேளு காதல்னா என்னான்னு கேளு....

காதலிலே தோல்வி என்று
கலங்கி நிற்கும் கண்ணா ,
உனக்கு கோவம் வரும் காதலோட
நிலமைய நான் சொன்னா ....

நான் சொல்லுறது ஆம்பளைக்கு
மட்டுமில்ல பொண்ணு ,
உங்களுக்கும் சேர்த்துதானே
சொல்லபோறேன் கண்ணு...

மணிக்கணக்கா செல்லுல நீ
போடவேணும் கடலை,
நீ மறந்துபுட்டா வேற ஆள
தேடும் அந்த விடலை...

தினம்தினம் அவ(ன்) செல்லுக்கு நீ
பண்ணனும் டாப்அப்பு,
நீ தவறிப்புட்டா காதலுக்கு அவ(ன்)
வச்சுடுவா(ன்) ஆப்பு ,

அடுத்தவ(ன்) கிட்ட பேசினாலே
வந்திடும் சந்தேகம் ,
அந்த சந்தேகத்தால் தினம்தினம்தான்
நொந்தது உன் தேகம் ........

காதலிச்ச ஆளுமேல
வேணுமே நம்பிக்க - நீ
நம்ப மறுத்துப்போனதால இப்போ
தனிமரமா நிக்க..

காலைமுதல் மாலைவர
பேசுவீங்க பேச்சு - அந்த
பேச்சினிலே காமம் மட்டும்
ஆக்கிரமிச்சு போச்சு.....

மனசு செய்யும் காதலிலே
மற்றதை எதிர்பார்த்த !
காதல் என்று சொல்லிபுட்டு
கண்டதையும் சேர்த்த ..

பார்க் பீச்சு எங்கும் உங்க
எல்லைக்கு அளவில்ல,
உன்னைப்போல காதலரால்
பொதுமக்களுக்கும் தொல்ல ......

கிடைக்குற சந்திலேல்லாம்
பாடுறீங்க சிந்து - அத
பாக்கையில வெந்துபோகும்
எங்க மனம் நொந்து .....

சின்ன சின்ன லீலைகளை
நீங்களும்தான் செஞ்சு ,
பார்த்து நாளும் கெட்டுபோகும்
சின்ன பசங்க நெஞ்சு.....

அவனுக்கும் அறிவில்ல பெண்ணே
உனக்கு எங்க போச்சு,
இந்த சீண்டல்தான உங்களுக்கு
நாகரீகம் ஆச்சு.......

ஆம்பளைங்க தப்பு செஞ்சா
கண்டுக்காத தேசம் ,
பெண்ணே நீயும் செஞ்சுபுட்டா உன்
வம்சத்தையே பேசும்....

பெத்தவங்க இதையும் கேட்டால்
அவங்க மனம் கூசும்,
உன்ன பெத்ததுக்கு அவங்களதான்
ஊருலகம் ஏசும்....

நீ காதலையும் காமத்தையும்
பிரித்தரிஞ்சு பழகு - அந்த
பழக்கம் தானே காதலுக்கு
என்னைக்குமே அழகு....

நீ பண்ணுறதெல்லாம் காதல் இல்ல
பிக்அப்பு டா கண்ணு ,
அதுக்கு ஏண்டா கலங்கி நிக்க
அடுத்தத ரெடி பண்ணு .....

கண்கள் மட்டும் பேசும் பேச்சு
உண்மை காதல் ஆச்சு ,
அதைத்தவிர மத்ததெல்லாம் -வெறும்
சுண்ணாம்பு பூச்சு .........

கண்ட கண்ட கண்ட்றாவிய
காதலுன்னு சொன்னா - உன்
கன்னம் ரெண்டும் வீங்கிபோகும்
டீக்கடையின் பன்னா ..............

பிரிஞ்சிருந்தும் வாழும் காதல்
உண்மையான காதல் - அந்த
காதலுக்கு மட்டுமில்ல
என்னைக்குமே சாதல்...

நீ செய்யுறத காதலுன்னு
மறுபடியும் சொல்லு ,
ஓங்கி ஒன்னு விட்டுடுவேன்
உடஞ்சுபோகும் பல்லு.....

இத்தோட முடிச்சுக்குறேன்
என்கதைய சொல்லி ,
இதுக்குமேல அழுதா உனக்கு
வச்சுடுவேன் கொள்ளி..............

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா.. (21-Jan-12, 6:56 pm)
பார்வை : 508

மேலே