அலமாரியில் அழுக்காய் நான்...!!
உன்னுடன் இருந்த அந்த அழகிய நாட்கள்..!!
நீ காலில் இழுத்து மிதித்த நேரத்தில்
வலித்த போதும் கத்தியதில்லை நான்..!!
உன் அன்பான அணைப்பில்
சிலிர்த்த போதும் சிரித்ததில்லை நான்..!!
அன்னைக்கு அடுத்ததாய் அதிகநேரம்
உன் கை பற்றி இருந்தவன் நான்தானே..?
உதிரம் உருட்டி செய்த பொம்மை
என்று நினைத்தாயோ என்னை..!!
சில நேரங்களில் அன்பில் இருக்க
கட்டி திளைத்தாய்...!!
சில நேரங்களில் காற்றோடு
வீசி அடித்தாய்...!!
நன் கை இழந்த நேரம்.. ஞாபகம்
உண்டோ உனக்கும்...?
அன்னையிடம் அடம் பிடித்து
இழுத்து வந்தாய் என்னை..!!
அப்போது நீ அறியவில்லை வலுக்கட்டாய
இழுப்பில் எந்தன் ஒரு கை
அம்மாவின் கையில்...!!
சேமிப்பு அலமாரியில் இப்போது நான்
இருந்தாலும்...
பத்திரமாய் சேமித்து வைக்கும்
பழங்காலத்து நாணயம் போல்
இப்போது உந்தன் இணைவுகள்
என்னிடம்...!!
மண்ணை தின்னும் மழலையாய்
உந்தன் எண்ணம் தின்கிறேன்...!!
தந்தை பேசி செல்கையில் அறிந்துகொண்டேன்
உனக்கு பிள்ளளை பிறக்க போவதை..!!
சந்தோசங்களுடன் சந்தேகங்களும் பல
மீண்டும் நான் கீழ் இறங்குவேனோ...??
இப்படிக்கு...
அலமாரியில் அழுக்காய் கை உடைந்த
உந்தன் விளையாட்டு பொம்மை..!!